பதிவின் சுருக்கம் : பொய் சாட்சி சொல்வதின் தீமை; அனைத்துப் புறங்களில் இருந்தும் விலகிக் கொண்ட அக்னி; பிரம்மனின் அறிவுரை; சாபத்தின் பாதிப்புக் குறைப்பு...
சௌதி சொன்னார், "பிருகுவின் சாபத்தால் கோபங்கொண்ட அக்னிதேவன், முனிவரிடம் {பிருகுவிடம்}, "ஓ பிராமணரே {பிருகுவே}, என்னிடம் நீர் இப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு என்ன பொருள்?(1) நான் பெருமுயற்சி செய்து, பாரபட்சமின்றி உண்மையைப் பேசி, நீதியை நிலைக்கச் செய்த போது, வரம்பு {விதிகளை} மீறியதாகத் தாம் என்மேல் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? என்னைக் கேட்டதால், நான் உண்மையான பதிலைச் சொன்னேன்.(2) ஓர் உண்மையை அறிந்தவனைச் சாட்சியாகக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, அவன் உண்மைக்கு மாறாகப் பேசினால், அவனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினரையும், சந்ததியினர் ஏழு தலைமுறையினரையும் பாழாக்கியவனாவான் {நரகத்தில் தள்ளியவனாவான்}.(3) தான் முழுவதும் அறிந்திருந்தும், அறிந்ததை முழுமையாகக் கூறவில்லை என்றால், அவனும் குற்ற உணர்வால் கறைபட்டிருப்பான்.(4) என்னாலும் உமக்குச் சாபமிட முடியும். ஆனால் பிராமணர்கள் என்னால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இவையெல்லாம் உமக்கும் தெரிந்தாலும், ஓ பிராமணரே, நான் சொல்வதைக் கேளும்!(5)
எனது தவசக்தியால், நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். தினசரி ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும், வருடக்கணக்காக நடைபெறும் வேள்விகளிலும் இருக்கிறேன்.(6) (திருமணம் போன்ற) புனிதச் சடங்குகள், பலிகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். என் தழல்களின் மேல் வேத விதிகளின் படி இடப்படும் நெய்யைத் தேவர்களும், பித்ருக்களும் பெற்றுச் சாந்தம் அடைகின்றனர்.(7) தேவர்களும், பித்ருக்களும் நீர் {தண்ணீர்} ஆவர். தர்ஷம், பூர்ணமஷம் என்னும் வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது.(8) ஆகையால் தேவர்களே பித்ருக்கள், பித்ருக்களே தேவர்கள். ஒரேமாதிரியான {சமமான} அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள்.(9)
அந்தத் தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். எனவே, என்னைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான வாய் என்று அழைக்கிறார்கள்.(10) புதுமதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், தூய்மையாக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், அனைத்தையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) உண்பவனாக எவ்வாறு நான் ஆக முடியும்?” என்றான் {அக்னி}.(11)
அதன்பிறகு, அக்னி சிறிது யோசித்துவிட்டு பிராமணர்களின் ஹோமங்களிலிருந்தும், நீண்ட வேள்விகளிலிருந்தும், புனிதச் சடங்குகள் மற்றும் வைபவங்களிலிருந்தும் என எல்லா இடங்களிலிருந்தும் விலகிக் கொண்டான்.(12) நெருப்பில்லாததால் ஓம்களும், வஷட்களும், சுவதாக்களும், சுவாஹாக்களும் (பிரார்த்தனைகளில் சொல்லப்படும் மந்திரங்கள்) இல்லாமல்[1], அனைத்து உயிரினங்களும் துயரடைந்தன.(13)
கவலை கொண்ட முனிவர்கள், தேவர்களிடம் சென்று, "குறைவற்றவர்களே! அக்னி இல்லாமல் வேள்விகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து நின்று போனதால் மூன்று உலகங்களும் குழப்பத்தில் உள்ளன. காலந்தாழ்த்தாமல் இந்தக் காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள்" என்றனர். பிறகு முனிவர்களும் தேவர்களும் சேர்ந்து பிரம்மனிடம் சென்றனர்.(14,15) அவனிடம் {பிரம்மனிடம்} அக்னியின் சாபத்தைப் பற்றியும், அதனால் அனைத்து விழாக்களும் தடைப்பட்டிருப்பதையும் பற்றிய விவரங்களையும் எடுத்துரைத்தனர். அவர்கள், "ஓ நற்பேறுபெற்றவரே! ஏதோ காரணத்திற்காகப் பிருகு முனிவரால் அக்னி சபிக்கப்பட்டிருக்கிறான்.(16) உண்மையில் தேவர்களுக்கு வாயாக இருப்பவனும், வேள்விகளில் தரப்படுவதை முதலில் உண்பவனும், வேள்வி நெய்யை உண்பவனுமாகிய அக்னியானவன் எவ்வாறு வரைமுறை இல்லாமல் அனைத்தையும் உண்ணும் நிலைக்கு ஆளாகலாம்?” என்று கேட்டனர்.(17)
இந்த வார்த்தைகளைக் கேட்ட அண்டப்படைப்பாளன் {பிரம்மன்}, அக்னியைத் தன் முன் வர ஆணையிட்டான். பிரம்மன் தன்னைப் போன்றே அனைத்தையும் படைப்பவனும், என்றும் நிலைத்திருப்பவனுமான அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால்,(18) "உலகங்களைப் படைத்தவன் நீயே, அவற்றை அழிப்பவன் நீயே! மூவுலகங்களைப் பாதுகாப்பவன் நீயே! வேள்விகள் அனைத்தையும் வளர்ப்பவனும் நீயே!(19) எனவே, சடங்குகள் தடைபெறாமல் இருக்குமாறு நடந்து கொள்வாயாக. ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீயே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருக்கும்போது, ஏன் இவ்வளவு மூடனாக நடந்து கொள்கிறாய்?(20) அண்டத்தில் என்றுமே தூய்மையானவன் நீயே! அண்டத்தை நிலைத்திருக்க வைத்திருப்பவனும் நீயே! உன் முழு உடலாலும் வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும் தாழ்ந்த நிலைக்கு நீ ஆளாகமாட்டாய்.(21)
ஓ தழல்களால் ஆனவனே, பின்புறத்தில் இருக்கும் தழல்கள் {ஜ்வாலைகள்} மட்டுமே அனைத்தையும் உண்ணும்[2]. (ஊனுண்ணிகள் அனைத்தின் வயிற்றிலும் இருக்கும்) இறைச்சியை உண்ணும் உன்னுடைய உடலும்[3] வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும். எப்படிக் கதிரவனின் கதிர்பட்டதும் எல்லாம் தூய்மையாகின்றனவோ,(22) அப்படியே உன் தழல்களால் எரிக்கப்படுபவை அனைத்தும் தூய்மையாகும். ஓ நெருப்பே, தானாக உருவான எல்லாம்வல்ல சக்தி நீயே.(23) ஓ தலைவனே, உனது அந்தச் சக்தியால் {பிருகு} முனிவரின் சாபம் உண்மையாகட்டும். உன் வாயில் படைக்கப்படுவனவற்றில் உனக்குச் சேர வேண்டிய பங்கையும், தேவர்களுக்குச் சேர வேண்டிய பங்கையும் எடுத்துக் கொண்டு உனது பணியைத் தொடர்வாயாக" என்றான் {பிரம்மன்}.(24)
சௌதி தொடர்ந்தார், "அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)
ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு, சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன" {என்றார் சௌதி}.(28)

[1] ஓம் என்று வேதம் ஓதுவது, வஷட் என்று வேள்வி செய்வது, சுவதா என்று பிதுர்க்கடன் {சிராத்தம்} செய்வது, சுவாகா என்று ஹோமம் செய்வது ஆகியன நின்று போயின என்பது இங்கே பொருள்.

[2] தீயின் நாக்கு (அனல்) என்பது முன்பகுதி ஆகும். கனல் எனப்படும் கீழ்ப்பகுதி மட்டுமே தான் பற்றிய பொருட்கள் அனைத்தையும் உண்ணும். அனல் எனும் மேற்பகுதி, எரியும் (உண்ணப்படும்) பொருளிலிருந்து விலகியே இருக்கும்.
[3] இறைச்சியுண்ணும் விலங்குகளின் வயிற்றில் செரிமானம் செய்யும் அக்னி, செரிக்காததைச் செரிக்க வைப்பது. எல்லா உயிரினங்களின் வயிற்றிலும் உணவை செரிப்பதற்காக ஜாடராக்னி என்ற பெயரில் அக்னி இருக்கிறான். அவன் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் போது உண்ணத்தகாததை உண்பவனாகக் கருதப்படுகிறான்.
சௌதி தொடர்ந்தார், "அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)
ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு, சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன" {என்றார் சௌதி}.(28)
No comments:
Post a Comment