ஆஸ்தீக பர்வம் - 6
பதிவின் சுருக்கம் : மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்...
பாற்கடல் கடைதல் |
"சௌதி சொன்னார், "மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) "எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக" என்று வேண்டினர்."(5)
சௌதி தொடர்ந்தார், "ஓ பிருகு குல மைந்தரே{சௌனகரே}! விஷ்ணுவும் பிரம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
அந்தத் தாமரைக்கண்ணன் (விஷ்ணு), கடினமான அவ்வரும்பணியைப் பாம்புகளின் இளவரசனான அனந்தனுக்குக் {திருமாலின் படுக்கையான ஆதிசேஷன் என்ற பாம்புக்கு} கொடுத்தான்.(6) ஓ பிராமணரே {சௌனகரே}, பிரம்மனாலும், நாராயணனாலும் அறிவுறுத்தப்பட்ட அந்தப் பலம்பொருந்திய அனந்தன், அந்த மலையை, அதன் கானகங்களுடனும், அவற்றில் வசித்த உயிர்களுடனும் பெயர்த்தெடுத்தான்.(7,8) தேவர்கள், கடலின் கரைக்கு அனந்தனுடன் வந்து, பெருங்கடலிடம் {சமுத்திரத்திடம்}, "ஓ கடலே! நாங்கள் உன்னைக் கடைந்து, அமுதத்தை எடுக்க வந்துள்ளோம்" என்றனர்.(9) அதற்கு அந்தப் பெருங்கடல், "அப்படியே ஆகட்டும், ஆனால் கிடைப்பனவற்றில் எனக்கும் பங்கு வேண்டும். கடையும்போது, அந்த மலையின் சுழற்சியால் ஏற்படும் கலக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியும்" என்றது.(10) அதன்பிறகு தேவர்கள், ஆமை மன்னனிடம் {திருமாலின் கூர்ம அவதாரம்} சென்று, "ஓ ஆமை மன்னா! நீ அந்த மலையை உன் முதுகில் தாங்கிக் கொள்ள வேண்டும்" என்றனர்.(11) ஆமை மன்னனும் அதற்கு ஒப்புக்கொண்டதால், இந்திரன் மந்தர மலையை முன்னவனின் {ஆமையின்} முதுகில் வைக்கச் செய்தான்.(12)
தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை மத்தாக வடித்து, வாசுகியை (பாம்பினை) கயிறாகப் பயன்படுத்தி, அமுதத்துக்காக அந்தக் கடலைக் கடைய ஆரம்பித்தனர். அசுரர்கள் வாசுகியின் தலைப் பக்கம் பிடித்துக் கொண்டனர், தேவர்கள் அவனது வால்பக்கம் பிடித்துக் கொண்டனர்.(13,14) அனந்தன், தேவர்களின் பக்கம் நின்று {தேவர்களின் நன்மைக்காக} வாசுகியின் தலையை உயர்த்துவதும், திடீரெனத் தாழ்த்துவதுமாக இருந்தான்.(15) தேவர்களும் அசுரர்களும் இழுத்த இழுப்பில், வாசுகியின் வாயிலிருந்து கரும்புகை நெருப்புடன் வெளிப்பட ஆரம்பித்தது.(16) அந்தப் புகை மேகமாக மாறி, இடி மின்னலுடன் கூடிய மழையைப் பொழிந்து களைத்துப் போன தேவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது.(17) மத்தாகச் சுழன்ற மந்தர மலையில் இருந்து அனைத்துப் பக்கங்களிலும் விழுந்த மலர்களும் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.(18)
ஓ பிராமணரே! {சௌனகரே}, கடலில் இருந்து ஒரு கடுமையான முழக்கம் கேட்டது. அஃது ஊழிக் காலத்தில் மேகங்கள் இடும் முழக்கத்திற்கு ஒப்பானதாக இருந்தது.(19) பெரிய நீர் விலங்குகள் அந்தப் பெரிய மலையின் சுழற்சியால் அந்த உப்பு நீரிலேயே தமது உயிரை விட்டன.(20) பாதாள உலகில் வசிப்பவர்களும், வருணனின் உலகில் வசித்தவர்களும் கொல்லப்பட்டனர்.(21) மந்தர மலை சுழன்று கொண்டிருக்கும்போது அதன் மீதிருந்து பறவைகளுடன் கூடிய பெரிய மரங்களும் வேருடன் பிடுங்கப்பட்டு நீருக்குள் விழுந்தன.(22) மேலும் பல மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து அவ்வப்போது நெருப்பை உண்டாக்கின. அப்படி அந்த மலை மின்னலுடன் கூடிய கருமேகம் போல் காட்சியளித்தது. (23) ஓ பிராமணரே! {சௌனகரே}, நெருப்புப் பரவி சிங்கங்களும், யானைகளும், மற்ற உயிரினங்களும் அதில் சாம்பலாகின.(24) பிறகு இந்திரன் பெரும் மழையைப் பொழிந்து அந்த நெருப்பை அடக்கினான்.(25)
ஓ பிராமணரே! {சௌனகரே}, இப்படியே கடைந்துகொண்டு சிலகாலம் ஆனதும், மரங்களின் பாலும் அமுதத்தின் தன்மை கொண்ட மூலிகைகளும் ஒன்றாகக் கலந்து அந்தக் கடலில் கலந்தது.(26) தேவர்கள், அந்தக் கூழுடனும், தங்கச்சாற்றுடனும் {தங்கரஸத்துடனும்} கலந்த நீரைக் குடித்தே அமரத்துவம் அடைந்தனர்.(27) கொந்தளித்த கடலின் பால் போன்ற நீர் {கொந்தளித்த அந்தப் பாற்கடல்} நன்றாகக் கடையப்பட்டு அந்தக் கூழான சாற்றின் தன்மையால் தெளிந்த நெய்யைப் போன்று காட்சியளித்தது. ஆனால் அப்போதும் அமுதம் தோன்றவில்லை.(28) தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த வரங்கொடுக்கும் பிரம்மன் முன்பு தேவர்கள் வந்து, "தகப்பனே, நாங்கள் களைப்படைந்தோம். மேலும் கடைவதற்கு எங்களிடம் பலம் இல்லை. அமுதம் இன்னும் உதிக்கவில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. நாராயணனைத் தவிர எங்களுக்கு வேறு ஆதாரம் இல்லை {உதவுபவர் வேறு ஒருவருமில்லை}" என்றனர்.(29,30)
"இதைக் கேட்டதும் பிரம்மன், நாராயணனிடம், "ஓ தெய்வமே! தேவர்களுக்கு மீண்டும் கடலைக் கடைவதற்கான பலத்தை அருள்வாயாக" என்றான்.(31)
பிறகு நாராயணன் அவர்களது பல்வேறு வேண்டுதல்களை {பிரார்த்தனைகளை} நிறைவேற்ற உறுதிகூறி, "ஞானமுள்ளவர்களே, போதிய பலத்தை உங்களுக்குத் தருகிறேன். போய் மலையை மீண்டும் சரியான இடத்தில் வைத்து நீரைக் கடையுங்கள்" என்றார்.(32)
அப்படிப் பலத்தை மீண்டும் பெற்ற தேவர்கள் திரும்பவும் கடையத் தொடங்கினர்.(33) சிறிது காலத்திற்குப் பிறகு மென்மையான ஆயிரங்கதிர்களுடன் நிலவு (சந்திரன்) கடலில் இருந்து உதித்தான்.(34)
வெண்மையான உடையுடன் லட்சுமியும், அதன் பிறகு சோமமும், அதன்பிறகு வெள்ளைக் குதிரையும்,(35) அதன்பிறகு நாராயணனின் மார்பை அலங்கரிக்கும் தெய்வீக ரத்தினமான கௌஸ்துபமும் வெளிப்பட்டன.(36) லட்சுமி, சோமம், மனத்தின் வேகங்கொண்ட குதிரை என அனைவரும், மகிழ்ச்சியுடன் இருந்த தேவர்கள் முன்னிலையில் வந்தனர்.(37,38) அதன்பிறகு அமுதம் கொண்ட வெள்ளைப் பாத்திரத்தோடு தன்வந்தரி உதித்தான்.(39) அவனைப் பார்த்ததுமே, அசுரர்கள் "அஃது எங்களுடையது" என்று பெரிதும் கூச்சலிட்டனர்.(40)
நீண்ட நேரத்திற்குப் பிறகு, சிறந்த யானையான ஐராவதன், இரு ஜோடி வெள்ளைத் தந்தங்களுடனும், பெருத்த உடலுடனும் தோன்றினான். அவனை இடிக்குத் தலைவனான இந்திரன் எடுத்துக்கொண்டான்.(41) கடைதல் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாகக் காலகூட {ஹாலாஹலம் என்ற} நஞ்சு வெளிப்பட்டது[2].(42) புகையுடன் கூடிய நெருப்புடன் அஃது உலகத்தையே விழுங்கிவிடுவது போலத் தகித்தது. பயத்தைத் தரும் காலகூடத்தின் மணத்தை நுகர்ந்தே மூன்று உலகங்களும் உணர்விழந்தன.
படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான்.(43) அந்தத் தெய்வீகமான மகேஸ்வரன் {சிவன்}, அந்த நஞ்சைத் தனது தொண்டையில் நிறுத்தினான். ஆகையால் அதுமுதல் அவன் நீலகண்டன் (நீல நிற தொண்டையுள்ளவன்) என அழைக்கப்படுகிறான் என்று சொல்லப்படுகிறது.(44) இந்த அற்புதமான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட அசுரர்கள் நம்பிக்கையிழந்தனர். அமுதத்தையும், லட்சுமியையும் பெற தேவர்களைப் பகைத்துக் கொள்ளத் தயாராகினர்.(45)
அந்நேரத்தில் நாராயணன் தனது மயக்கும் மாய சக்தியின் உதவியால் (ஏமாற்றும் சக்தி) மதியைக் கவரும் பெண்ணுருக் கொண்டு தானவர்களிடம் இதமான காதல் மொழி பேசினான்.(46) தானவர்களும், தைத்தியர்களும் அந்த மங்கையின் பேரழகினாலும், கவர்ச்சியானாலும் மயக்கப்பட்டு, மதியிழந்து அனைவரும் சேர்ந்து அந்த அமுதத்தை அந்த அழகு மங்கையின் கையிலேயே கொடுத்தனர்" {என்றார் சௌதி}.(47)
[1] அதாவது 88,000 மைல்கள் {1 யோஜனை = 8 மைல்கள்} மேலெழுந்தவாரியாக – புவி ஓட்டுக்கு மேல் தெரியும் பகுதி, கீழிறங்கியவாறு – பூமிக்குள் புதைந்து அமைந்த பகுதி

[2] காலகூட நஞ்சுதான் முதலில் தோன்றியது என்று சொல்லும் பதிப்புகளும் இருக்கின்றன. அவையே சரியானதாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அமுதம் முதலிலேயே கிடைத்துவிட்டால், பிறகும் ஏன் கடலைக் கடைய வேண்டும்.
படைக்கப்பட்டவற்றின் பாதுகாப்புக்காக, பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை எடுத்து விழுங்கினான்.(43) அந்தத் தெய்வீகமான மகேஸ்வரன் {சிவன்}, அந்த நஞ்சைத் தனது தொண்டையில் நிறுத்தினான். ஆகையால் அதுமுதல் அவன் நீலகண்டன் (நீல நிற தொண்டையுள்ளவன்) என அழைக்கப்படுகிறான் என்று சொல்லப்படுகிறது.(44) இந்த அற்புதமான நிகழ்வுகள் அனைத்தையும் கண்ட அசுரர்கள் நம்பிக்கையிழந்தனர். அமுதத்தையும், லட்சுமியையும் பெற தேவர்களைப் பகைத்துக் கொள்ளத் தயாராகினர்.(45)
அந்நேரத்தில் நாராயணன் தனது மயக்கும் மாய சக்தியின் உதவியால் (ஏமாற்றும் சக்தி) மதியைக் கவரும் பெண்ணுருக் கொண்டு தானவர்களிடம் இதமான காதல் மொழி பேசினான்.(46) தானவர்களும், தைத்தியர்களும் அந்த மங்கையின் பேரழகினாலும், கவர்ச்சியானாலும் மயக்கப்பட்டு, மதியிழந்து அனைவரும் சேர்ந்து அந்த அமுதத்தை அந்த அழகு மங்கையின் கையிலேயே கொடுத்தனர்" {என்றார் சௌதி}.(47)
No comments:
Post a Comment