ஆஸ்தீக பர்வம் - 7
பதிவின் சுருக்கம் : அமுதத்துக்காக நடந்த தேவாசுரப் போர்; ராகுவின் தலையைக் கொய்த நாராயணன்; போரை வென்ற தேவர்கள்; அமுதகலசத்தை நாராயணனிடம் கொடுத்த இந்திரன்...
அசுரர்கள் மற்றும் தேவர்களுடன் மோகினி |
சௌதி சொன்னார், "தைத்தியர்களும் தானவர்களும் முதல்தரமான கவசங்களை அணிந்துகொண்டு ஆயுதங்களால் தேவர்களைத்[1] தாக்கினர்.(1) அந்த நேரத்தில் துணிவுள்ள தலைவனான விஷ்ணு, கவர்ச்சியான பெண்ணுருக் கொண்டு நரனுடன் சேர்ந்து தானவர்களின் கைகளிலிலிருந்து அமுதத்தைப் பறித்தான்.(2)
[1] தைத்தியர்கள் என்போர் திதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தானவர்கள் என்போர் தனு என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தேவர்கள் என்போர் அதிதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். திதியும், தனுவும், அதிதியும் தக்ஷனின் மகள்கள் ஆவர். தக்ஷனின் 13 மகள்களைக் கசியபர் மணந்தார்.
"பெரும்பயத்தை உண்டாக்கக்கூடிய அந்த நேரத்தில் தேவர்கள் அமுதத்தை ஆவலுடன் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் குடித்தனர்.(3) தாங்கள் பெரிதும் விரும்பிய அமுதத்தைத் தேவர்கள் பருகிக் கொண்டிருக்கையில், ராகு என்ற தானவனும், தேவ வேடம் பூண்டு அமுதத்தைக் குடித்துக் கொண்டிருந்தான்.(4) அது ராகுவின் தொண்டைக்குள் செல்லும்போதுதான் சூரியனும், சந்திரனும் (அவனை அடையாளம் கண்டு) தேவர்களிடம் காட்டிக் கொடுத்தனர்.(5)
உடனே, அமுதத்தை அனுமதியின்றிப் பருகிய அந்தத் தானவனின் அலங்கரிக்கப்பட்ட தலையை நாராயணன் சக்கர ஆயுதத்தைக் கொண்டு வெட்டினான்.(6) அப்படிச் சக்கர ஆயுதத்தால் வெட்டுண்டதும், மலைமுகட்டை ஒத்திருந்ததுமான அந்தத் தானவனின் பெரிய தலை, வானத்தில் எழுந்து பயங்கரமாகக் கதறியது.(7) அந்தத் தானவனின் தலையற்ற உடல் பூமியில் விழுந்து உருண்டதால், மலைகளுடனும், கானகங்களுடனும், தீவுகளுடனும் இருந்த பூமி நடுங்கியது.(8) அச்சமயத்திலிருந்து ராகுவின் தலைக்கும் சூரிய சந்திரர்களுக்கும் நெடுநாள் பகை {தீராப்பகை} இருந்து வருகிறது. இந்த நாள்வரை ராகு சூரியனையும், சோமனையும் {சூரிய சந்திர கிரகணங்களின் போது} விழுங்கி வருகிறான்.(9)
அமுதம் பகிர்ந்தளித்த மோகினி |
[2] கும்பகோணம் பதிப்பில் சூரியன் மறையும் காலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் சூரியன் சிவந்த போது என்றிருக்கிறது.
இப்படிப் போர் மூர்க்கமான முறையில் நடந்து கொண்டிருக்கையில், நரனும், நாராயணனும் களத்தில் இறங்கினர்.(19) நரனின் கைகளில் தெய்வீகமான வில்லைக் கண்ட நாராயணன், தானவர்களை அழிக்கும் தனது ஆயுதமான சக்கராயுதத்தை மனத்தில் நினைத்தான்.(20) எதிரிகளை அழிப்பதும், அக்னியையொத்த ஒளிகொண்டதும், போர்க்களத்தில் பயங்கரமானதுமான அந்தச் சுதர்சனச் சக்கரம், நினைத்த மாத்திரத்தில் வானிலிருந்து வந்தது.(21) அது {சுதர்சனம்} வந்ததும், பெரும் ஆற்றலுடையவனும், யானையின் துதிக்கைப் போன்ற கைகளையுடையவனுமான நாராயணன், இயல்புக்கு மீறிய காந்தியுடையதும், எரியும் தீயைப் போன்றதும், பயங்கரமானதும், எதிரிகளின் நகரங்களை அழிக்க வல்லதுமான அந்த ஆயுதத்தைப் பெரும் வேகத்தோடு வீசினான்.(22) யுக முடிவின் போது நெருப்பு எப்படி அனைத்தையும் உட்கொள்ளுமோ அப்படி, தீப்போன்று ஒளிர்ந்த அந்தச் சக்கரம் நாராயணனால் வேகமாக வீசப்பட்டவுடன் தொடர்ந்து எல்லா இடங்களிலும் விழுந்து தைத்தியர்களையும், தானவர்களையும் ஆயிரக்கணக்கில் எரித்தது.(23) சில நேரம் தீப்போல எரிந்து அவர்களை உட்கொண்டது, சில நேரம் வானிலிருந்து இறங்கிவந்து தாக்கியது, சில நேரம் பூதத்தைப் போல அவர்களின் உயிரைக் குடித்தது.(24)
மறுபுறத்தில் பெரும்பலம் பொருந்தியவர்களும், நெஞ்சுறுதி கொண்டவர்களுமான தானவர்கள், மழை பொழிந்த வெண்ணிற மேகங்களைப் போல் வானில் கிளம்பி, ஆயிரக்கணக்கான மலைகளை வீசி தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினர்.(25) மரங்களுடையதும், சமமான சிகரங்களுடையதுமான {சிகரங்கள் சரிந்ததுமான} அந்தப் பயங்கரமான மலைகள், வானிலிருந்து விழும்போது ஒன்றோடொன்று மோதிக்கொண்டு பெறும் உறுமல் ஒலியை உண்டாக்கின.(26) ஆயிரக்கணக்கான வீரர்கள் இடைவெளியின்றிக் கூச்சலிட்டதாலும், மலைகள் அதிலிருக்கும் காடுகளுடன் கீழே விழுந்ததாலும், காடுகளுடன் கூடிய பூமியானது நடுங்கிற்று. இப்படித் கணங்களும் {ருத்ரனைத் தொடர்பவர்கள்} அசுரர்களும் மோதிக்கொண்டிருக்கையில்,(27) நரன் தோன்றி, தனது பொன்தலைக் கணைகளால் அந்த மலைகளைத் தூள் தூளாக்கி சொர்க்கத்தைப் புழுதியால் மறைத்தான்.(28) இப்படித் தேவர்களால் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டதாலும், குழப்பப்பட்டதாலும் சீற்றமிகுந்த சக்கரமானது சொர்க்கத்தின் பகுதிகளையும் எரிகின்ற தழல் போலக் கலங்கடித்து அழுக்ககற்றி வருவதாலும், வலிமை வாய்ந்த தானவர்கள் பூமியின் குடலுக்குள்ளும், {பாதாளத்துக்குள்ளும்}, உப்பு நீர் கடலிலும் புகுந்தனர்.(29) வெற்றியடைந்த தேவர்கள், மந்தர மலைக்குத் தக்க மரியாதைகள் செய்து, அஃதை அதன் பழைய அடித்தளத்திலேயே {அது முன்பு இருந்த இடத்திலேயே} மீண்டும் நிறுவினர். அமுதுண்ட தேவர்கள் அவர்களது உற்சாகக்குரலால் தேவலோகத்தை எதிரொலிக்கச் செய்து விட்டு அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றனர்.(30,31) தேவர்கள் தேவலோகத்திற்கு வந்து உற்சாகமாக இருந்தனர். இந்திரனும் பிற தேவர்களும் அமுதத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை நாராயணனிடம் கொடுத்தார்கள்" {என்றார் சௌதி}.(32)
No comments:
Post a Comment