கிருஷ்ணன் தூது |
அடுத்து, உத்யோக பர்வம் என்று அறியப்படும் ஐந்தாவது பர்வத்தை (உத்யோக பர்வத்தின் உள்ளடக்கத்தைக்) கேட்பீராக. வெற்றியை விரும்பிய பாண்டவர்கள், உபப்பிலாவ்யம் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த போது,(218) துரியோதனனும் அர்ஜுனனும் ஒரே நேரத்தில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} சென்று, "இந்தப் போரில் உன் துணையை எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டனர்.(219) இவ்வார்த்தைகளைக் கேட்ட உயர் ஆன்மக் கிருஷ்ணன் "மனிதர்களில் முதன்மையானவர்களே! ஒருபுறம் போர் புரியாத ஆலோசகராக நானும்,(220) மற்றொருபுறம் ஓர் அக்ஷௌஹிணி துருப்புகளும் இருக்கிறோம். இதில் உங்கள் இருவரில் யாருக்கு எதைக் கொடுப்பது?" என்றான். தன் சுய விருப்பங்களால் குருடனாவனும், மூடனுமான துரியோதனன் துருப்புகளைக் கோரியது;(221) அர்ஜுனன் போரிடாத ஆலோசகராகக் கிருஷ்ணனயே வேண்டியது. அதன்பிறகு, மத்ரத்தின் மன்னன் {சல்லியன்} பாண்டவர்களுக்குத் துணைபுரிய வந்து கொண்டிருந்தபோது, கொடைகளாலும், விருந்தோம்பலாலும் அவனை வஞ்சித்த துரியோதனன், அவனை ஒரு வரம் தரத் தூண்டி, பிறகு அந்த வரமாகப் போரில் அவனது துணையை வேண்டுவது;(222,223) சல்லியன் துரியோதனனிடம் இப்படி வார்த்தையைக் கொடுத்துவிட்டுப் பாண்டவர்களிடம் வந்து நடந்த நிகழ்ச்சியையும் சொல்லி, இந்திரனின் வெற்றிக் கதை (இந்திரனுக்கு விருத்திராசுரனுக்கும் நடைபெற்ற போர்) ஒன்றையும் சொல்லி பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தது.(224)
அதன்பிறகு, பாண்டவர்களின் புரோகிதர் கௌரவர்களிடம் அனுப்பப்படுதல் வருகிறது. அதன்பிறகு மன்னன் திருதராஷ்டிரனிடம் பாண்டவர்களின் புரோகிதர் சொல்லும் இந்திரனின் வெற்றிக்கதையைக் கேட்ட பின் {திருதராஷ்டிரன்} தனது புரோகிதரை அனுப்ப நினைத்து இறுதியில் சஞ்சயனை பாண்டவர்களிடம் அமைதியேற்பட அனுப்புவது.(225,226) இங்கேதான் பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} அவர்களது நண்பர்களையும் பற்றிக் கேள்விப்பட்டுக் கவலையடையும் திருதராஷ்டிரனின் தூக்கமற்ற நிலை விவரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில்தான் உண்மை பிறழாத விதுரன் திருதராஷ்டிரனிடம் விவேகம் நிறைந்த பல ஆலோசனைகளைக் கூறும் சம்பவம் வருகிறது.(227,228) மேலும் இந்த இடத்தில்தான் கவலையில் மூழ்கியிருக்கும் மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} ஆன்மிகத் தத்துவங்களின் உண்மைத் தன்மையைச் சனத்சுஜாதர் விவரிக்கிறார். அடுத்த நாள் காலையில் மன்னனின் {திருதராஷ்டிரனின்} சபையில், சஞ்சயன், வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் உடல் மற்றும் மனக் குறிப்புகளைத் தெரிவிக்கிறான்.
அப்போதுதான் அன்பாலும், அமைதிக்கான ஆசையாலும் உந்தப்பட்ட சிறப்புமிக்கக் கிருஷ்ணன், தானே கௌரவத் தலைநகரான ஹஸ்தினாபுரம்த்திற்குச் சென்று அமைதியை வேண்டுகிறான். இரு தரப்புக்கும் நன்மையைத் தரக்கூடிய கிருஷ்ணனின் ஆலோசனைகள் துரியோதனனால் மறுக்கப்படுவது. இந்த இடத்தில் தம்போத்பவனின் கதை சொல்லப்படுகிறது;(229-233) உயர்ந்த உள்ளங்கொண்ட மாதலி தனது மகளுக்குக் கணவனைத் தேடுவது; அதன்பிறகு பெருமுனிவரான காலவரின் வரலாறு;(234) அதன்பிறகு விதுலையின் பயிற்சிகளும் ஒழுக்கமுறைகளும் வருகின்றன. மன்னர்களின் முன்னிலையில், துரியோதனன் மற்றும் கர்ணனின் தீய ஆலோசனைகளை அறிந்து கொண்டு, தனது யோக வலிமையால் கிருஷ்ணன் விஸ்வரூபக் காட்சி தருவது; அதன்பிறகு கிருஷ்ணன் தனது தேரில் கர்ணனை அழைத்துப் போய் அறிவுரை கூறுவதும்,(235,236) கர்ணன் தற்பெருமையால் {கர்வத்தால்} அதை மறுப்பதும் வருகிறது. பிறகு எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து உபப்பிலாவியத்திற்குத் திரும்பி,(237) பாண்டவர்களிடம் நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்கிறான். அதன்பிறகு பகைவர்களை ஒடுக்குபவர்களான பாண்டவர்கள், அனைத்தையும் கேட்டு, ஒருவரோடொருவர் நன்கு ஆலோசித்து, போருக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்கின்றனர்.(238-239)
அதன்பிறகு காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள் மற்றும் யானைகள் போருக்கு அணிவகுத்து வருவது. பிறகு இருதரப்பில் உள்ள துருப்புகளின் எண்ணிக்கை சொல்லப்படுகிறது. போருக்கு முன்பு உலூகனை துரியோதனன் பாண்டவர்களிடம் தூதனுப்புகிறான். பல்வேறு பிரிவுகளின் தேரோட்டிகள் கதை அதன்பிறகு வருகிறது. அதன்பிறகு அம்பையின் கதை.(240,241) போர் தயாரிப்புகளும், அமைதி ஏற்பாடுகளுமான இவையனைத்தும் மஹாபாரதத்தின் ஐந்தாவது பர்வமான உத்யோக பர்வத்தில் வருகின்றன.(242) ஓ துறவிகளே! பெருமுனிவர் வியாசர் நூற்று எண்பத்து ஆறு {186} பகுதிகளில்[7] ஆறாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எட்டு {6698} பாடல்களில் {சுலோகங்களில்} விவரித்துள்ளார். (243,244)
அதன்பிறகு அற்புதமான நிகழ்வுகள் கொண்ட பீஷ்ம பர்வம் உரைக்கப்படுகிறது. ஜம்பூ என்ற இடம் உருவான வரலாற்றுக் குறித்துச் சஞ்சயனால் இங்குச் சொல்லப்படுகிறது.(245) யுதிஷ்டிர சேனையின் பெரிய மனத்தளர்ச்சியும், அடுத்தடுத்து பத்து நாட்கள் நடந்த கொடூரப் போரும் வருகின்றன.(246) தன் பாட்டன் மீது கொண்ட மதிப்பால் அர்ஜுனனிடம் எழுந்த கழிவிரக்கத்தை, உயர் ஆன்ம வாசுதேவன் {கிருஷ்ணன்}, இறுதி விடுதலை தத்துவத்தின் {பகவத்கீதையின்} மூலம் அவனிடம் இருந்து விரட்டுவது.(247) மகத்தானவனும், யுதிஷ்டிரனின் நன்மையில் கவனமாக இருப்பவனுமான கிருஷ்ணன், (பாண்டவப் படைக்கு) நேர்ந்த அழிவைக் கண்டு, தைரியமான இதயத்துடனும், கையில் சாட்டையுடனும், தன் தேரில் இருந்து இறங்கி பீஷ்மரைக் கொல்ல அவரை நோக்கி வேகமாக ஓடுவதும் இதில் {இந்தப் பர்வத்தில்} வருகிறது. இதில்தான், காண்டீவதாரியும், ஆயுததாரிகள் அனைவரிலும் போரில் முதன்மையானவனுமான அர்ஜுனனைத் துளைக்கும் வார்த்தைகளால் கிருஷ்ணன் தாக்குவது வருகிறது. வில்லாளிகளில் முதன்மையான அர்ஜுனன், தன் முன் சிகண்டியை நிறுத்திக் கொண்டு, தன் கூரிய கணைகளால் பீஷ்மரைத் துளைத்து, அவரது தேரில் இருந்து வீழ்த்துவது வருகிறது. இதில் தான் பீஷ்மர் தன் கணைப்படுக்கையில் நீண்டு கிடப்பதும் வருகிறது.(248-251) இந்தப் பெரிய பர்வமானது மஹாபாரதத்தின் ஆறாவது பர்வமாக அறியப்படுகிறது. வேதங்களை அறிந்த வியாசரால் நூற்றுப் பதினேழு {117} பகுதிகளில்[8], ஐயாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு {5888} பாடல்களில் இவையனைத்தும் விவரிக்கப்படுகின்றன.
அதன்பிறகு நிகழ்வுகள் நிறைந்த அற்புத பர்வமாகிய துரோண பர்வம் வருகிறது.(252-254) முதலில், பெரும் ஆயுத ஆசானான துரோணரைப் படைத் தலைமையில் நிறுவப்படுவது; துரியோதனனை மனநிறைவு செய்வதற்காக யுதிஷ்டிரனைக் கைப்பற்றுவதாகத் துரோணர் சூளுரைப்பது; சம்சப்தகர்களிடம் இருந்து அர்ஜுனன் பின்வாங்கி,(255,256) களத்தில் இரண்டாவது இந்திரனைப் போல இருந்த பகதத்தனையும், அவனது யானையையும் வீழ்த்துவது; தனியனாக, ஆதரவற்றவனாகத் தன் பதின்ம வயதில் இருந்த வீரன் அபிமன்யு, ஜெயத்ரதன் உள்ளிட்ட பல மஹாரதர்களின் கைகளில் மரணத்தை அடைவது;(258) அபிமன்யுவின் மரணத்திற்குப் பிறகு, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளையும் ஜெயத்ரதனையும் அர்ஜுனன் அழிப்பது;(259) யுதிஷ்டிரனின் கட்டளையை ஏற்று, தேவர்களாலும் ஊடுருவப்பட முடியாத கௌரவத் துருப்புகளுக்குள் வலிய கரங்களைக் கொண்ட பீமனும், தேர்வீரர்களில் முதன்மையான சாத்யகியும் அர்ஜுனனைத் தேடி ஊடுருவுவதும், சம்சப்தகர்களின் அழிவும்.(260,261) அலம்புசன், சுருதாயு, ஜலசந்தன், சௌமதத்தன் {சோமதத்தன்}, விராடன், பெரும் தேர்வீரனான துருபதன், கடோத்கசன் ஆகியோரும், இன்னும் பிறரும் மரணமடைவது இந்தத் துரோண பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன; மேலும் அஸ்வத்தாமன் தனது தந்தையின் மரணத்தால் கோபங்கொண்டு நாராயணக் கணையை ஏவுதல். (மூன்று நகரங்களை) அழித்ததில் ருத்ரனின் மகிமை.(262-264) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் பெருமைகளை வியாசர் வந்து விவரித்தல் ஆகியவை வருகின்றன.(265) இதுவே, வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது {170} பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது {8909} பாடல்கள் {சுலோகங்கள்} இருக்கின்றன.(267,268)
இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10]நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)

[7] கங்குலியில் உத்யோக பர்வத்தில் 199 பகுதிகள் இருக்கின்றன.

[8] கங்குலியில் பீஷ்ம பர்வத்தில் 124 பகுதிகள் இருக்கின்றன.

[9] கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.
இதன் பிறகு அற்புதமான கர்ண பர்வம் வருகிறது. இதில் (கர்ணனின்) தேரோட்டியாக ஞானியான மத்ர மன்னன் {சல்லியன் நியமிக்கப்பட்டது உரைக்கப்படுகிறது.(269) அதற்கடுத்து திரிபுரன் என்ற அசுரனின் வீழ்ச்சி பற்றிய வரலாறு சொல்லப்படுகிறது. போருக்குப் புறப்படுமுன்பு கர்ணனுக்கும் சல்லியனுக்கும் இடையே நடந்த வாக்குவாதம், கர்ணனை அவமதிக்க அன்னத்தையும் காக்கையையும் ஒப்பிட்டு {சல்லியன்} கதை சொல்வது; அஸ்வத்தாமன் கையால் பாண்டியன் இறப்பது;(271) தண்டசேனன் மற்றும் தண்டன் ஆகியோரின் மரணம்; ஆபத்து என்றறிந்தும் அனைத்து வீரர்களுக்கு மத்தியில் கர்ணனுடன் யுதிஷ்டிரன் தனித்துப் போர் புரிவது; அர்ஜுனனும் யுதிஷ்டிரனும் ஒருவருக்கொருவர் கோபத்துடன் பேசிக்கொள்வது;(272,273) கிருஷ்ணன் அவர்களை அமைதிப்படுத்தல் ஆகியன இந்தப் பர்வத்தில் வருகின்றன. இந்தப் பர்வத்தில், பீமன் தன் சபதத்தை நிறைவு செய்யும் வகையில், துச்சாதனனுடைய மார்பைக் கிழித்து, அவனுடைய இதயத்தின் இரத்தத்தைக் குடிக்கும் காட்சி விவரிக்கப்படுகிறது. பின்பு அர்ஜுனன் நேருக்கு நேராகக் கர்ணனிடம் போர் புரிந்து அவனை {கர்ணனை} வீழ்த்துவது வருகின்றது.(274,275) பாரதத்தை உரைப்பவர்கள் இதை எட்டாவது பர்வம் என்று சொல்கின்றனர். இஃது அறுபத்தொன்பது {69) பகுதிகளும்,[10]நாலாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு {4964} பாடல்களில் {சுலோகங்களில்} விவரிக்கப்பட்டுள்ளது.(276,277)
No comments:
Post a Comment